தமிழ்நாடு

அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்கள் ஏமாந்துவிடாதீர்கள்: கமல்ஹாசன்

தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்திவிடாதீர்கள் என மக்கள் நீதி மய்யம் 

DIN


திருப்பரங்குன்றம்: தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்திவிடாதீர்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தனது கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

அப்போது, தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்திவிடாதீர்கள். மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்படும். சுத்தம் செய்யப்படமால் உள்ள சாக்கடைகள் சுத்தம் செய்யப்படும்.

ஒரு ரூபாய் கூட் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்றும், ஒரு ரூபாய் கூட வரி பணத்தை எடுக்க மாட்டேன் என்று கூறினார். 

 மேலும், எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றாவிடில் நானே ராஜிநாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT