தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனை மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம்: ஸ்டாலின் கண்டனம் 

DIN

சென்னை: மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று மின்தடையின் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் எந்திரங்கள் செயல்படாமல் மூன்று நோயாளிகள் பலியாகியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.

அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT