தமிழ்நாடு

மோடி - ஷி ஜின்பிங் இரவு விருந்தில் இட்லி, பூரிக்கு முதலிடம்: முக்கியமாக மசால் தோசை!

DIN

பிரதமர் நரேந்திர மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு இன்று மாலை நிறைவு பெற்றவுடன், இரு தலைவர்களுக்கும் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவு நடைபெறும் விருந்தில் தென்னிந்திய உணவுகளே முக்கிய இடம் பிடிக்கும் என்றும், சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருந்தில் பிரதமர் மோடியுடன் 7 இந்திய பிரதிநிதிகளும், சீன அதிபருடன் 7 சீனப் பிரதிநிதிகளும் உட்பட 16 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

இவ்விருந்தில் நீங்களோ, நானோ நினைப்பது போல உயர்தர சைனீஸ் உணவுகள் இடம்பெறப் போவது இல்லையாம். முழுக்க முழுக்க தென்னிந்திய உணவுகள்தான் அதிகம் இடம்பெறப் போகிறதாம். தமிழகத்தின் பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகளுடன், குறிப்பாக காரைக்குடி மற்றும் செட்டிநாடு உணவு வகைகளும் இடம்பெற உள்ளன.

அதாவது, இட்லி, தயிர் சாதம், வடை, பூரி - உருளைக் கிழங்கு மற்றும் மசால் தோசை ஆகியவைதான் சீன அதிபருக்கான விருந்தில் முதலிடம் வகிக்கப் போகின்றன.

அதே சமயம் சைவ உணவுகளே அதிகம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT