முகப்பு
தமிழ்நாடு

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்ளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் மட்டும் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதித்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:02 AM
பகிர்:


சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்ளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் மட்டும் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதித்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், டெங்குவால் இறப்பு இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் கடலூர் உட்பட 7 மாவட்ட ஆட்சியர்களுடன் டெங்கு தடுப்பு மற்றும் மழைநீர்  சேகரிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் ஈடுபட வேண்டும். கொசு பரவலைத் தடுக்க அவரவர் வீட்டில் செய்யவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சுய மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.