முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்தியில்,
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. 

சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தலா 15 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.