அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி மரியாதை

மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.  

DIN

மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

அதன்படி, அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 8 மணியளவில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எம்.பி. கனிமொழி , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT