தமிழ்நாடு

விக்ரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சனிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில், நாங்குநேரியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

விக்ரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். விக்ரவாண்டியில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும். இதையடுத்து திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT