விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் காமராஜர் நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
எதிர்வரும் அக்டோபர் 21--ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: எதிர்வரும் அக்டோபர் 21--ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கட்சியின் சார்பாக புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி - காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (25-09-2019) அறிவித்துள்ளார் .
Advertisement
Advertisement
வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு;
விக்கிரவாண்டி: கு.கந்தசாமி - சமூகச் செயற்பாட்டாளர்
நான்குநேரி: சா.ராஜநாராயணன் - இளங்கலை வரலாறு
காமராஜர் நகர் (புதுச்சேரி): பிரவினா மதியழகன் - குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.