தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி 'குரூப் 2' தேர்வில் மொழித்தாள் நீக்கம்: திமுக எம்பி கனிமொழி அதிருப்தி

DIN

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2  மற்றும் குரூப் 2 ஏ  ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும்  இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டி.என்.பி.எஸ்.சியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக எம்.பி.,கனிமொழி தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும்.

தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT