தமிழ்நாடு

ஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பு

DIN

மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற கட்சிகளின் கட்சிக் கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் இன்று ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேசினார். 

தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்த பிரதமர் மோடியிடம் அவரது நலன் குறித்து ஸ்டாலின் கேட்டார். அப்போது, ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் மத்திய அரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப்பூர்வ ஆலோசனையை திமுக தரும் எனவும் பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கூறினார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாட இருக்கிறாா்.

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT