புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பு
புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழ்நாடுபுதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பு
புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புதுவை மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றால் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாஹே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவா் மாஹே அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கரோனா பாதிப்புக்கு முதல் நபர் பலியாகி உள்ளார்.
இதையடுத்து எல்லைப்பகுதியில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்