அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
இன்று அம்பேத்கரின் 129-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார்.
இன்று அம்பேத்கரின் 129-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 21 நாட்களுக்குப் பிறகு ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினுடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அனைவருமே சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன் மாஸ்க் அணிந்திருந்தனர்.
மேலும், அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அறிவையும் கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம்.
சமத்துவமும், ஜனநாயகமும் அவரது இரு கண்கள். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்' என்று பதிவிட்டுள்ளார்.