திமுக சார்பில் கோபால்ரெட்டி கண்டிகையில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்
கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை, கோபால்ரெட்டி கண்டிகை பகுதி மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை, கோபால்ரெட்டி கண்டிகை பகுதி மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான பிரபாகரன் ஏற்பாட்டில் கோபால்ரெட்டி கண்டிகை கிராமத்தில் 450 குடும்பங்களுக்கு தலா 5கிலோ அரிசி, பால், பழங்கள், சத்துமாவு, 30 முட்டைகள், சோப்பு உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் சி.எம்.ஆர்.ரேணுகா முரளி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமார், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவி தொகுப்பை வழங்கினார்கள்.