தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கரோனா; 600 கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி

கோயம்பேடு காய்கறி சந்தையில் 600 மொத்த விற்பனைக் கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

DIN

கோயம்பேடு காய்கறி சந்தையில் 600 மொத்த விற்பனைக் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் அங்குள்ள வியாபாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தொடர்ந்து இன்றைய பேச்சுவார்த்தை முடிவில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோயம்பேடு சந்தையில் மொத்தமுள்ள 3,000 கடைகளில் 600 கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் சில்லறை விற்பனை கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு சிறு வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கோயம்பேடு சந்தையில் நேற்று வரை வியாபாரம் செய்த பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT