விழுப்புரத்தில் கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் 48 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 48 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மட்டும் 37 பேருக்கு தொற்றுள்ளதால் நோய் பரவல் அச்சம் தொடர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கூட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் நகரில் ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், புதிய சந்தை பகுதிகள் உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செயத அதிகாரிகள் பொதுமக்கள் வரத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். உரிய அடையாள அட்டை இல்லாதவர் வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
Advertisement
இதனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்த மக்கள் கூட்டம் தற்போது கட்டுக்குள் வந்து சீரடைந்துள்ளது.