முகப்பு
தமிழ்நாடு

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மே 3 முதல் தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மே 3ஆம் தேதி முதல் ஒரு மண்டலம் தைலக் காப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மே 3ஆம் தேதி முதல் ஒரு மண்டலம் தைலக் காப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. 

எனவே, கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்காக அம்பாளின் வலது புறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கை, அம்பாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். 

அப்போது, ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனை செய்யப்படும். அப்போது, கருவறை அம்பாளுக்கு 48 நாள்களுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். இதன்படி, மே 3-ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த தைலாபிஷேகத்துக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் நடைபெறவுள்ளது என தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →