தமிழ்நாடு

தமிழகத்தில் பொதுமுடக்க காலத்தில் விதிமீறல்: ரூ.20 கோடியை நெருங்கும் அபராதம்

DIN

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியவர்களிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை ரூ.19.35 கோடியாக உள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 744 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 24 ஆயிரத்து 633 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 6 லட்சத்து 60 ஆயிரத்து 011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.19 கோடி  35 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மொத்த விவரம்
மொத்தம் 6,60,011 வாகனங்கள் பறிமுதல்
விதிமீறியதாக 9,24,633 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை
இதுவரை 8,40,744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT