சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் முழுவதும் ஏலத்தில் விடப்பட்டதாக சுங்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நடந்த விபத்தினை அடுத்து, சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்ததை அடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதன் பாதுகாப்பை ஆய்வு செய்த நிலையில், நேற்று ஏலம் விடப்பட்டது.
மொத்தமுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 697 டன் மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மீதியுள்ள 43 டன் என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், மொத்தமுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 43 டன் அளவில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் கரைந்ததாகவும், மீதமுள்ள 697 டன் அம்மோனியம் நைட்ரேட் மட்டும் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக முழுவதுமாக அம்மோனியம் நைட்ரேட் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
ஹைதராபாத் நிறுவனம் ஒன்று ஏலத்தில் எடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக 200 டன் அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.