முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்வு

பெட்ரோல் விலை திங்கட்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில்பெட்ரோல் விலை திங்கட்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.87ஆக விற்கப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து 22ஆவது நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. 

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 48 நாட்களுக்கு பிறகு நேற்று பெட்ரோல் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →