தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கரோனா; மேலும் 118 பேர் பலி

DIN

தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 26, புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் ஒரேநாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் மொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய பாதிப்பில் தமிழகம் முழுதும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,943. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 15 பேர்.  

மேலும், கரோனா தொற்றால் இன்று 118 பேர் ((அரசு மருத்துவமனை - 77, தனியார் மருத்துவமனை - 41) உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் 5,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,38,060 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 52,362 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT