முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்

அவிநாசி அருகே தெக்கலூரில் கட்டடக் கல் ஏற்றி வந்த வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வெள்ளிக்கிழமை காலை சம்பவயிடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
டயர் வெடித்து கட்டடக் கல்லுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.
பகிர்:

அவிநாசி அருகே தெக்கலூரில் கட்டடக் கல் ஏற்றி வந்த வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வெள்ளிக்கிழமை காலை சம்பவயிடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் புறவழிச்சாலையில் இருந்து அவிநாசி நோக்கி கட்டடக் கல்(கம்பி வேலி அமைப்பதற்கான கல்) ஏற்றிக் கொண்டு வேன் வந்து கொண்டிருந்தது. அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும் போது எதிர்பாராதவிதமாக முன்புற டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கட்டடக் கல், வேனில் பயணம் செய்த கட்டடத் தொழிலாளர்கள் மீது விழுந்ததில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகன ஓட்டுநர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிநாசி புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தினல் கட்டடக் கூலித் தொழிலாளி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.