முகப்பு
தமிழ்நாடு

நாகை துறைமுகத்தில் 3- ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் 

நாகை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
நாகை துறைமுக அலுவலகத்தில் 3- ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் திரிகோணமலைக்கு 600 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 900 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 3- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

 திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் உள்ளூர் முன்னறிவிப்பாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →