தமிழ்நாடு

புரெவி புயல்: வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் 20 செ.மீ மழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

DIN

வேதாரண்யம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 20 செ.மீ மழை பதிவானது. 

புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் பாதிப்பு இருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய காற்று புதன்கிழமை இரவு படிப்படியாக அதிகரித்து இரவு முழுதும் தொடர்ந்தது.

ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட தாழ்வான கிராமங்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.

தாழ்வான விளை நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து வருகிறது. மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT