தமிழ்நாடு

கொள்ளிடத்தில் கொட்டித்தீர்த்த 360 மி.மீ. மழை: பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்த மக்கள்

DIN

சீர்காழி: கொள்ளிடத்தில் புதன்கிழமை அதிகாலை முதல்  கொட்டித்தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட  வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

புயல் காரணமாக சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 360 மி.மீட்டர், சீர்காழியில் அதிகபட்சமாக 21 மி.மீட்டர் மழை என மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வடரங்கம் ஊராட்சி வடரங்கம் ஊராட்சி காலனி தெருவில் இரவு பெய்த தொடர் கனமழையால் 50 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

சென்னியநல்லூர் கிராமம் காலனி தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT