முகப்பு
தமிழ்நாடு

மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் 
பகிர்:

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த முகாமுக்கு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலாமணி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், முகாம் ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சக்திராஜ் குழுவினர் ரத்ததானம் பெற்றனர். மொத்தம் 34 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.