தமிழ்நாடு

நாளை கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். 

முன்னதாக புயல் காரணமாக பெய்த கனமழையால் கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக ‘புரெவி’ புயலால் பெய்த பலத்த மழையால் கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி நேரடியாக நாளை கடலூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT