முகப்பு
தமிழ்நாடு

டிசம்பர் 14-இல் அதிமுக ஆலோசனைக் கூட்டம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டிசம்பர் 14-இல் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14-ம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 20-இல் நடைபெற்ற கூட்டத்தில் பேரவைத் தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் டிசம்பர் 14 மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →