முகப்பு
தமிழ்நாடு

ஊத்துக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊத்துக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.More than 500 DMK and allied parties staged a road blockade in Uth

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
ஊத்துக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல்
பகிர்:

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊத்துக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதவாக   தாமைரைப்பாக்கம் கூட்டுசாலையில்  திமுக விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் தமைரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தில்லியில் 9600 டிராக்டர்கள் மற்றும ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த சில வாரங்களாக போராடிவரும் விவசாயிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முடிவு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்திவேல் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த தங்கம் முரளி,  சீனிவாசன், முனிவேல், பாஸ்கர், நாகலிங்கம்,  கோடுவெள்ளி சுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், பூந்தமல்லி தொகுதி செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தாமரைப்பாக்கம் சம்பத், பழனி, ரமகண்ணன், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மகேந்திரன், வெங்கல் சிவசங்கரன், உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக  அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →