தமிழ்நாடு

நெல்லையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கனமழையாக இல்லாமல் சாரல் போல பெய்து குளிர்ந்த வானிலை நிலவியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புரெவி புயலால் எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்யவில்லையென்றாலும், புயல் வலுவிழந்து போன நிலையிலும் கடந்த இருநாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. 

தாமிரவருணி பாசன கால்வாய் பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடியும், மானாவாரியில் நெல், உளுந்து, பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. 


திருநெல்வேலி, கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூர், கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் பகுதிகளிலும் மழை பெய்து மிகவும் குளிர்ந்த வானிலை நிலவியது. இதுதவிர அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

ஏற்கெனவே கடந்த சில நாள்களாக பெய்த மழையால் திருநெல்வேலி மாநகர குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இதுதவிர பொலிவுறு நகரம் திட்டப்பணிகள் காரணமாக பல்வேறு சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. கே.டி.சி.நகர், கோடீஸ்வரன்நகர் பகுதிகளில் வடிகால் வசதிகளை உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: மழை அளவு: பாபநாசம்-43, சேர்வலாறு-21, மணிமுத்தாறு-15.4, அம்பாசமுத்திரம்-5.40,சேரன்மாதேவி-0.20, நான்குனேரி-1, ராதாபுரம்-24.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT