முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 31வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 31வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,98,888-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 1,276 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,76,878-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,895-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 340 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,19,861-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,188 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,12,756-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,917-ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக 155 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments