முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,141 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,00,029 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 343 பேரும், கோவையில் 124 பேரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் 1,203 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,78,081 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய அறிவிப்பில் 14 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,909 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 10,039 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 63,989 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மொத்தம் 231 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments