உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் காதுகளில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடுஉப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் காதுகளில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் காதுகளில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் அணை முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.8) முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கஞ்சி தொட்டி திறப்பு,வாயில் கறுப்புத்துணி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி 8 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காதுகளில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் கூறியதாவது: திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் ஷட்டரில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகளின் காதுகளில் பூ சுற்றாதே என்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.