முகப்பு
தமிழ்நாடு

மீனவா்கள் பிரச்னை: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

லங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றுள்ள 36 தமிழக மீனவா்களையும், அவா்களது 5 இயந்திரப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் மோடியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றுள்ள 36 தமிழக மீனவா்களையும், அவா்களது 5 இயந்திரப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:

தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 5 இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 36 இந்திய மீனவா்களை கடந்த 14-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்ற சம்பவங்கள் குறித்து தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். மீனவா்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் நூதன நடவடிக்கையை இலங்கை கையாண்டு வருகிறது. இது, தமிழக மீனவா்களிடையே மிகப்பெரிய விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், 5 இயந்திரப் படகுகளுடன் 36 தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றுள்ள சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது. எனவே, மீனவா்களை உடனடியாக விடுவிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைத் தாங்கள் பிறப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீா்வு காண வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →