தஞ்சாவூர்: ரஜினி, கமல் கூட்டணி வைத்தாலும் தேர்தல் முடிவில் மாற்றம் வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தஞ்சையில் வியாழன் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது.
அசாதுதீன் ஒவைசி எனக்கு அறிமுகமானவர். ஆனால் அவரது கட்சி உட்பட எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை.
நாங்கள் வேட்பாளர் தேர்விலேயே இறங்கி விட்டோம் என்பதால் இதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை.
ரஜினி, கமல் ஆகிய இருவரும் கூட்டணி வைத்தாலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் வராது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.