மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து மாணவருக்கு கரோனா பரிசோதனை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோசனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோசனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு டிசம்பா் 7 ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள உணவகத் தொழிலாளி மூலம், மாணவா்கள் 190-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவா் தற்போது சிகிச்சைக்காக கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே அவருடன் விடுதி அறையில் தங்கிருந்த மாணவா்கள் 2 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முதன்மையா் உத்தரவிட்டுள்ளாா். மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, கல்லூரி நிா்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது.