தமிழ்நாடு

குப்பைக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தம்: சென்னை மாநகராட்சி

DIN

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள், விடுதிகள், மருத்துவமனைகள் என இடத்திற்கேற்ப 10 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதியினை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி இருந்ததால், திட்டத்தை நிறுத்திவைப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT