முகப்பு
மறைமலைநகரில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகிறார்.
தமிழ்நாடு

பிரதமருடன் கலந்துரையாடல்: மறைமலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்பு

பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளுடனான காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி மறைமலைநகரில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்றார்.

தமிழ்நாடு

பிரதமருடன் கலந்துரையாடல்: மறைமலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்பு

பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளுடனான காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி மறைமலைநகரில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்றார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
மறைமலைநகரில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகிறார்.
பகிர்:

செங்கல்பட்டு: பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளுடனான காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி மறைமலைநகரில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்றார்.

முன்னாள்  பிரதமர் அட்டல் பிகாரி வாஜபேயி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இந்தியா முழுவதும் 20,000-இடங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதனையொட்டி  செங்கல்பட்டு மாவட்டம்,  மறைமலைநகரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள திடலில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பலராமன் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த சாதனை புத்தகத்தை வெளியிட்டு நிற்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர்.

இந்நிகழ்வில் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், 
தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடத்தி திமுகவின் முகத்திரையை கிழித்ததாகவும், பிரதமர் மோடியை அவதூறாக பேசிய மதபோதகர் எஸ்றா சற்குணம் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்  நடத்தும் என பேசினார்.

மறைமலைநகரில் நடைபெற்ற பிரதமருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்பு

இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 2004-ல் இருந்து 2014-வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் 10-ஆண்டுகள் ஆட்சியில் இருந்து போது எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் திட்டத்தின் கீழ் புதிய வேளாண் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், அதை தற்போது பாஜக நிறைவேற்றியுள்ளதாகவும், பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் வேளாண் சட்ட மசோதாவை ஆதரிப்பதாகவும், திமுக, காங்கிரஸ் வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினாலும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக பேசினார். 



மேலும் 9-கோடி விவசாயிகளுக்கு 18-ஆயிரம் கோடி மதிப்பில் தலா 2000-ரூபாய் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது விவசாயிகளுக்காக 43-ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு கொடுத்ததாகவும், ஆனால் பாஜக அரசு 1,20,000-கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டதாகவும் பேசினார். 

மேலும் திமுக, காங்கிரஸ் என யார் போராடினாலும் இந்த வேளாண் சட்டம் இயங்கும் என பேசினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →