தமிழ்நாடு

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா: சுகாதாரத் துறை செயலாளர்

DIN

சென்னை;  பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த நபர் ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பு சிகிச்சை மையத்தில் தனியறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரிட்டனிலிருந்து வந்த 17 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு உருமாறிய கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதில்லாமல், பிரிட்டனிலிருந்து வந்து அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 16 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவருக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பில் மட்டும் மாறுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 30 பேரின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT