முகப்பு
தமிழ்நாடு

ரஜினி மூலம் அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டது: கே.ஏஸ்.அழகிரி

ரஜினிகாந்த் மூலம் அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி (கோப்புப்படம்)
பகிர்:

ரஜினிகாந்த் மூலம் அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்ததால்,  பாஜகவின் சதித்திட்டம் தவிடுபொடியாகியுள்ளதாகவும் விமர்சித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், அதிமுகவை உடைக்க ரஜினிகாந்த் என்ற மையப்புள்ளியின் அடிப்படையில் பாரதிய ஜனதா சதித்திட்டம் தீட்டியது. ஆனால் ரஜினியின் அறிவிப்பால் அவர்களது சதித்திட்டம் தவிடுபொடியாகியுள்ளது.

பாஜக விரித்த வலையில் விழாமல் ரஜினி தன் உயிரை பாதுகாப்போடு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். 

ரஜினியின் துணிச்சலான முடிவால் தமிழக அரசியலில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் படுதோல்வியடைந்துள்ளது.

பாஜகவிற்கு உயிர் கொடுக்க நினைத்த சிலரின் முயற்சி கடும் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →