முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாள்களில் 0.91அடி சரிந்தது

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் சரிந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 2 நாள்களில் 0.91அடி சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் சரிந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 2 நாள்களில் 0.91அடி சரிந்தது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்ததால் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியிலிருந்து 8000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பதால் நேற்று முன்தினம் 106.33அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 105.42 அடியாக சரிந்தது இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 0.91அடி சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 993 கன அடியிலிருந்து 877கன அடியாக சரிந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 105.42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 877கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.04 டி.எம்.சியாக இருந்தது. மழையளவு 8.80 மி.மீ

முழு கட்டுரையைப் படிக்க →