முகப்பு
தமிழ்நாடு

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மணப்பாறையில் கையெழுத்து இயக்கம்

மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:42 PM
பகிர்:

மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமணி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. 

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரியார் சிலை அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமணி எம்.எல்.ஏ இதனை தொடங்கி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.