தமிழ்நாடு

விலை உயர்வு: மணப்பாறையில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எம்.ராஜசேகர்

மணப்பாறையில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சமையல் எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டு அதற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 

கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT