முகப்பு
தமிழ்நாடு

கோவில்பட்டியில் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பிய த.மா.கா.வினர்

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், முதல்வர் மற்றும் அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 18 பிப்ரவரி, 2020 at 3:13 PM
பகிர்:

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், முதல்வர் மற்றும் அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட வேண்டும், அதற்கான பணியாளர்களை நியமிக்க வேண்டும், மாவட்ட மருத்துவமனையில் துணை இயக்குநர் அலுவலகம் கொண்டு வர வேண்டும், நரம்பியல் மருத்துவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும், ஆய்வக நுட்புனர் நியமனம் செய்ய வேண்டும், தேசிய நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் பயன்பெற்று வருகின்றனர். எனவே, போதியளவு மருத்துவர்கள் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ ஆகியோருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை அடங்கிய ஆயிரம் தபால்களை அனுப்பி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டாரத் தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துச்சாமி செல்லபாண்டியன், மாநில மாணவரணிச் செயலாளர் மாரிமுத்து ராமலிங்கம், நகர துணைத் தலைவர்கள் வீரபுத்திரன் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர்கள் வின்சென்ட், மூர்த்தி, செண்பகராஜ் , துணைச்செயலாளர்கள் மணிமாறன் சுப்புராஜ், மதன், நிர்வாகக்குழு உறுப்பினர் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.