முகப்பு
தமிழ்நாடு

ஏப்ரல் 4-ல் விராலிமலையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா

விராலிமலையில் வரும் ஏப்ரல் 4ல் மாற்றுக்கட்சியினர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழாவிற்கான பொதுகூட்ட மேடைக்கு பந்தல்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

விராலிமலையில் வரும் ஏப்ரல் 4ல் மாற்றுக்கட்சியினர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழாவிற்கான பொதுகூட்ட மேடைக்கு பந்தல்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி. அரசகுமார் அக்கட்சியில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் அவரது சொந்த ஊரான விராலிமலையில் பாஜக மற்றும் மாற்றுகட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த இணைப்பு விழா வரும் ஏப், 4 ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் இதற்கான திடல் தேர்வு செய்யும் பணி கடந்த சிலநாள்களாக நடைபெற்று வந்த நிலையில் விராலிமலை-மதுரை நான்கு வழிச்சாலை விராலூர் அருகே சுமார் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு பந்தல் கால் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் பி.டி. அரசகுமார், புதுக்கோட்டை மாவட்ட பொருப்பாளர் எஸ். ரகுபதி(தெற்கு), கே. கே. செல்லபாண்டியன்(வடக்கு), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைபித்தன், சொத்துபாதுகாப்புகுழு உறுப்பினர் த. சந்திரசேகர், மாவட்ட இலக்கிய அணி துணைசெயலர் எம். பழனியப்பன், ஒன்றியசெயலர் அ. இளங்குமரன்(மேற்கு), எம். சத்தியசீலன்(கிழக்கு), ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி முருகேசன்(பூதகுடி), ஜெயலட்சுமிகுமார்(வடுகபட்டி), எம். ரவி(விராலிமலை), ம. பாலசுப்பிரமணியன்(தென்னம்பாடி), வெ, பழனியாண்டி(விராலூர்), அ.ஆனந்தன்(கொடும்பாளூர்), செல்விசுப்பிரமணி(மேலபச்சக்குடி), ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன், விராலிமலை நகரசெயலர் க. சண்முகசுந்தரம், பி.டி.கே. சுரேஸ், பி. பிரபாகர், எம். பிரபு. சக்திவேல் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்னர்.

முழு கட்டுரையைப் படிக்க →