தமிழ்நாடு

சொத்து பிரச்னை: காவல்நிலையம் முன்பு தீக்குளித்தவர் மரணம்

DIN

சொத்து பிரச்னை காரணமாக மல்லி காவல் நிலையம் முன்பு தீக்குளித்தவர் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா, இவருக்குஜோதிமுருகன் என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கந்தையாவினுடைய பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் மகள் லட்சுமி பெயரில் எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்த நிலையில் சொத்து பிரச்னை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மல்லி காவல் நிலையத்தில் ஜோதிமுருகன் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திடீரென மல்லி காவல் நிலையம் முன்பு ஜோதி முருகன் தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் முழுவதும் தீ பற்றி மள மளவென எரிந்த நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அனைத்து படுகாயமடைந்த ஜோதிமணியை சிவகாசி அரசு மருத்துமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு (பிப்28)வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். 

இந்த சம்பவம் குறித்து மல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT