தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற தர்ணா போரட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் 
தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து தஞ்சாவூரில் முஸ்லிம்கள் தர்னா

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் முஸ்லிம்கள் தர்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் முஸ்லிம்கள் தர்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாநகரக் கிளைத் தலைவர் சையது முஸ்தபா தலைமை வகித்தார்.
 
இதில், கையில் தேசியக் கொடியை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். செயலர்கள் யாசர் அராபாத், பிலால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    

இதேபோல வல்லத்தில் தஞ்சாவூர் - திருச்சி சாலை, ஜும்மா மசூதி எதிரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது. இதில் கிளைச் செயலர் ஜாபர் அலி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில்: சிறுத்தை தாக்கி நான்கு வயது சிறுமி பலி

”கால தாமதம் உங்களுக்குத்தான்!” பத்திரிகையாளர்களைக் கடிந்துகொண்ட பிரேமலதா! | DMDK

சூடான், லெபனான் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

SCROLL FOR NEXT