தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது; உடையாது: கே.எஸ். அழகிரி

DIN


புது தில்லி: திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்த கைகள். திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை என்று மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசிய கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்த கைகள்தான். இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி உடையாது. கூட்டணி வலுவாகவே உள்ளது என்று பதிலளித்தார்.

அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் உருவாகியிருக்கும் சலசலப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை. நானும் ஸ்டாலினும் இணைந்த கரங்கள். எங்களுக்குள் சலசலப்பே இல்லை என்பதே எனது கருத்து. உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கருத்தை மட்டுமே நான் தெரிவித்தேன் என்று கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT