நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, என்.எல்.சி. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை காலை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடுத் தொகையையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், என்.எல்.சி. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.