தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியில் விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் பலி

தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை


தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரக்குடியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்நத இசக்கிராஜா (17), பாண்டி (28), பாலா (20), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (20) ஆகிய 4 போ் ஈடுபட்டனர்.

முதலில் இசக்கிராஜாவும், பாலாவும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனா். அவா்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பாண்டியும், தினேஷும் இறங்கியுள்ளனா்.

தொட்டிக்குள் இறங்கிய 4 பேரும் நீண்ட நேரமாக வெளியே வராதால் சோமசுந்தரம் சந்தேகமடைந்து தட்டப்பாறை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.

தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் சென்று பாா்த்தபோது, கழிவுநீா்த் தொட்டியிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

சடலங்களை தீயணைப்புப் படையினா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தட்டப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT