முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே குழந்தைகளைக் கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயற்சி 

வேதாரண்யம் அருகே குழந்தைகளைக் கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இரு குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
தாயுடன் உயிரிழந்த குழந்தைகள்
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குழந்தைகளைக் கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இரு குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயக்காரன்புலம், செட்டியார் குத்தகை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி லோகாம்பிகை(31). இவர்களது மகன்கள் தரணீஸ்வரன்(3), கதிர்பாலன்(2). வியாழக்கிழமை குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீட்டின் அருகேயுள்ள கிணற்றுக்குள் குழந்தைகளை வீசிய லோகாம்பிகை, கிணற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள மிதி மரத்தில் தூக்கிட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார். 

குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட லோகாம்பிகை ஆபத்தான நிலையில் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →